We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.

Shiva Thandavam Tamil

by Rahiman

/
  • Streaming + Download

    Includes unlimited streaming via the free Bandcamp app, plus high-quality download in MP3, FLAC and more.
    Purchasable with gift card

      $1 USD  or more

     

about

Shiva Thandavam, Produced By Sadhanai Sigaram Creations, sung by Rahiman, Composed by Tajmeel Sherif ,Lyrics by Mugilan

lyrics

பாடல் வரிகள் :

கோரஸ் :


சிவனாரின் தாண்டவம்... ஹரனாரின் தாண்டவம்...
பகவானின் தாண்டவம்... பரமேசன் தாண்டவம்…

சிவனாரின் தாண்டவம்... ஹரனாரின் தாண்டவம்...
பகவானின் தாண்டவம்... பரமேசன் தாண்டவம்…





பல்லவி :


திருத்தில்லை மீது தாண்டவம்
திருவாலங்காட்டில் தாண்டவம்
திருநெல்லை சீமை தாண்டவம்
திருவாரூர் தெய்வ தாண்டவம்
திருப்பேரூர் ஈசன் தாண்டவம்
திருமுண்டீச்சர தாண்டவம்
பிரபஞ்ச பஞ்ச பூதம் எங்கும்
பஞ்சநாதன் தாண்டவம்


அருணாச்சலத்தில் தாண்டவம்
அனல்மீது ருத்ர தாண்டவம்
அவிநாசி நாதன் தாண்டவம்
அருள் காசி ஈசன் தாண்டவம்
திருக்காஞ்சி கம்பன் தாண்டவம்
திருக்காளஹஸ்தி தாண்டவம்
பெரும் அண்ட பிண்ட பிரம்மாண்டம்
நீலகண்டன் தாண்டவம்





சரணம் 1 :


புல் பூண்டு தாவரம் மண்ணாண்டு மானுடம்
அன்போடு வாழ ஆடல்தேவன் ஆடும் தாண்டவம்
கல்லோடு தேரையும் கடைக்கோடி ஜீவனும்
பசி நீங்கி வாழ படைத்தவனும் ஆடும் தாண்டவம்

பிரதோஷ வேளையில்... பேரின்ப தாண்டவம்...
சிவசேத்திரம் யாவிலும்... சிவனாரின் தாண்டவம்.

காணும் பேறு கூடும் போது
வாழ்வில் ஏது வேறு இன்பமே... சிவ சிவா.



சரணம் 2 :


அறியாமை யாவையும்... மனதாசை மூன்றையும்
அடிசாய்க்க மாய்க்க ஈசன் வேஷன் ஆடும் தாண்டவம்
புலனாலும் வித்தையும் மெய்ஞான சித்தியும்
அடியாரும் ஏற்க ஆதிசிவன் ஆடும் தாண்டவம்.

சிவராத்திரி வேளையில்... ஏகாந்த தாண்டவம்
நவராத்திரி நாயகி... நடராஜன் தாண்டவம்

பார்க்கும் போது வேட்கை தீரும்
கேட்க்கும் யாவும் கூடும் உண்மையே... சிவ சிவா.





திருத்தில்லை மீது தாண்டவம்
திருவாலங்காட்டில் தாண்டவம்
திருநெல்லை சீமை தாண்டவம்
திருவாரூர் தெய்வ தாண்டவம்
திருப்பேரூர் ஈசன் தாண்டவம்
திருமுண்டீச்சர தாண்டவம்
பிரபஞ்ச பஞ்ச பூதம் எங்கும்
பஞ்சநாதன் தாண்டவம்

அருணாச்சலத்தில் தாண்டவம்
அனல்மீது ருத்ர தாண்டவம்
அவிநாசி நாதன் தாண்டவம்
அருள் காசி ஈசன் தாண்டவம்
திருக்காஞ்சி கம்பன் தாண்டவம்
திருக்காளஹஸ்தி தாண்டவம்
பெரும் அண்ட பிண்ட பிரம்மாண்டம்
நீலகண்டன் தாண்டவம்

கோரஸ் :
சிவனாரின் தாண்டவம்... ஹரனாரின் தாண்டவம்...
பகவானின் தாண்டவம்... பரமேசன் தாண்டவம்…

சிவனாரின் தாண்டவம்... ஹரனாரின் தாண்டவம்...
பகவானின் தாண்டவம்... பரமேசன் தாண்டவம்…

credits

released February 21, 2020

license

all rights reserved

tags

about

Sadhanai Sigaram Creations India

contact / help

Contact Sadhanai Sigaram Creations

Streaming and
Download help

Report this track or account

If you like Shiva Thandavam Tamil, you may also like: